பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம்
கடமை முடித்து வீடு சென்ற கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி அன்று குறித்த உத்தியோகத்தர், அலுவலகத்தில் கடமை முடித்து தனது வீடான பருத்தித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை..
இதன்போது, எழுதுமட்டுவாளுக்கு அண்மித்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த உத்தியோகத்தரை பேருந்தில் போத்தல் கொண்டு தாக்கியிருந்தனர்.

தாக்கப்பட்ட உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri