நாட்டைவிட்டு வெளியேறியுள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்: வெளியான காரணம்
பொருளாதாரப் பிரச்சினைகளால் 80 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தலையீட்டினால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, புதிய விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்
புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ஏற்கனவே 25க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பணியாளர்கள் பயிற்சியளிக்கப்பட்டு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு குழுவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
