ரணிலுக்கு ஆதரவு வழங்குங்கள்: மகிந்தவுக்கு அழுத்தம் கொடுக்கும் மொட்டு எம்.பிக்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என எஸ்.பி.திஸாநாயக்க எடுத்துரைத்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் அல்லது அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பலமுறை எடுத்துரைத்துள்ளோம்.

கட்சியின் ஒரு தரப்பினர் மாத்திரமே கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்கள்.

அத்துடன் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளார்கள். ஆகவே கட்சியின் பெரும்பான்மை நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
பொதுஜன பெரமுன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றிப் பெறுவார்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் 2022 ஆம் ஆண்டு நிலைவரமே மீண்டும் ஏற்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்கள்.

ஆகவே பொதுஜன பெரமுன சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கும்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் போட்டி நிலவும்
.அரகலயவின் போது மக்கள் மத்தியில் ஜே.வி.பியினருக்கு இருந்த செல்வாக்கு தற்போது முழுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. அனுரகுமார திஸாநாயக்கவின் பேச்சு கேட்பதற்கு அருமையாக இருக்கும் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்றது" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri