ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி! அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஈரானிலிருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 6 ட்ரோன்களையும் தடுத்து நிறுத்தியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதல்கள்
மேலும், பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்களின் ஆரம்பத்திலிருந்து இதுவரை, 298 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 க்ரூஸ் ஏவுகணைகள், 1,606 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த போரின் போது, United Arab Emirates நாட்டில் ஈரானின் தாக்குதல்களால் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 142 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலை இலக்கு வைக்கும் ஹவுதிகள்! ஹோர்முஸை தொடர்ந்து மூடப்படும் மற்றுமொரு நீரிணை - கேள்விகுறியாகும் உலக வர்த்தகம்
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri