ஏர் இந்தியா விமான விபத்து! இதுவரை பலியானோரின் எண்ணிக்கை..
புதிய இணைப்பு
அகமதாபாத்தில் இன்றையதினம் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைத்ததாக தெரியவில்லை என்று அகமாதாபாத் தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
அகமதாபாத்தில் இன்றையதினம் இடம்பெற்ற விமான விபத்தில் 130இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், மரணித்தவர்களின் சரியான மற்றும் உறுதியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
விபத்து..!!
அகமதாபாத்தில் இருந்து இலண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் விபத்திற்குள்ளானது.
இதில் விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 242 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் விபத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது, எனினும், இது இதுவரை எந்த தரப்பினராலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், விபத்து தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
