யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna) குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று முன்தினம்(02) குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்றையதினம் (03) தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, செட்டிக்குறிச்சி, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய குணசேகரம் வரதசுரோன்மணி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் நேற்று முன்தினம்(02) அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவரை கொட்டியுள்ளது.

இந்நிலையில், அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(03) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri