கனடாவை அதிகம் விரும்பும் அமெரிக்கர்கள்
2026 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்கள் இடப்பெயர்வு செய்ய விரும்பும் மிகவும் பிரபலமான நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்த ஆர்வம் அதிகரிக்க முக்கியக் காரணிகளாக மலிவான வாழ்க்கைச் செலவு, சுகாதார சேவை மற்றும் பாதுகாப்பு ஆகியவை விளங்குகின்றன.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு
ஆய்வு ஒன்றின்படி, பதிலளித்தவர்களில் 24.4வீதமானோர் கனடாவிற்கு இடம்பெயர்வதில் வலுவான விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், சுகாதாரச் செலவுகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகியவற்றால் தூண்டப்படும் அமெரிக்கர்களுக்கு, கனடாவின் அருகாமையும் கலாசார ஒற்றுமையும் உயர்தர வாழ்க்கைத்தரமும் இலகுவான தீர்வை வழங்குகின்றன.
கனடாவைத் தவிர ஐக்கிய இராச்சியம் 12.2வீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து பொருளாதார அழுத்தங்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், கனடா வழங்கும் ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்க்கைத்தரத்தின் கலவையே கனடாவை அமெரிக்கர்கள் விரும்பும் சிறந்த இடப்பெயர்வு இலக்காக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |