மலேசியாவில் 7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்!
மலேசியாவின் போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலோர மாநில தலைநகர் கோட்டா கினபாலுவிலிருந்து வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் 619.8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
சபாவின் தலைநகரான கோட்டா கினபாலுவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் பூமியின் அடியில் சுமார் 619.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சபாவின் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான சரவாக் பகுதியிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.57 மணிக்கு (NZT காலை 5.57 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் அல்லது சேதத்திற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக USGS மதிப்பிட்டுள்ளது.
மேலும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. மலேசிய வானிலை ஆய்வு மையம் "நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளது.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam