சூடுப்பிடிக்கும் சூப்பர் 8 போட்டிகள்! இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிப்பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்கா
லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று(22) மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி7 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்டப்ஸ் 44 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணி
இதையடுத்து 188 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

51 ஓட்டங்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இஷான் கிஷான் (0), திலக் வர்மா (1), அபிஷேக் ஷர்மா (15), வோஷிங்டன் சுந்தர் (11), சூர்யகுமார் யாதவ் (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா (18) கேசவ் மஹாராஜா 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரிங்கு சிங் (0), அர்ஷ்தீப் சிங் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், இந்திய அணி 18.4 ஓவரில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம், 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இது இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வியாகும்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் யான்சென் 4 விக்கெட்டும், கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டும், போஸ் 2 விக்கெட்டும், மார்க்ரம் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam