முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடி விபத்தில் நான்கு பணியாளர்கள் படுகாயம்!
முல்லைத்தீவு - மாங்குளம், துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(05.09.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
வெடிவிபத்து
குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது, தங்கராசா ராஜேஸ்வரி (வயது 43), கதிரேசு கவிகலா (வயது 40), கிஷோர் மோகனாம்பாள் (வயது 39), சிவரூபன் தமிழினி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன், படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam