அம்பலமாகிய ரணில் - அநுர ஒப்பந்தம்: பகிரங்கப்படுத்திய சஜித்
ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பது இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் இன்று (05.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவிற்கு அளிக்கும் வாக்கு திருடர்களின் அணியையே காப்பாற்றும். ரணில் தரப்புடன் அவர்களுக்கு ஒப்பந்தம் இருப்பது நிரூபணமாகியுள்ளது.
அவர்களுக்கு பயம்
அவர்கள் ஏன் எங்களுக்கு இவ்வளவு தூரம் அஞ்சுகின்றனர்? அவர்களுக்கு நாம் இந்த நாட்டை முன்னேற்றி விடுவோம் என்ற பயம் உள்ளது.
நாம் இந்த நாட்டில் வீடுகளைக் கட்டுவோம் என்று அவர்களுக்கு பயம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்போம் என்று அவர்களுக்கு பயம்.
இந்த நாட்டில் உள்ள 10,096 பாடசாலைகளையும் நாம் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவோம் என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது. இந்த நாட்டின் சுகாதார சேவையை கட்டியெழுப்புவோம் எனவும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் தான் ரணில் - அநுர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |