ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட முக்கியஸ்தர் சஜித் அருகில்
ஜனாதிபதி தேர்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இந்த திடீர் தீர்மானம் தமிழரசு கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தும் முக்கிய திட்டமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், ஐ.நாவில் ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட முக்கியஸ்தர் ஒருவர் தற்போது தமிழ் மக்களுக்கு எதிரான உளவாளியாக சஜித் பிரேமதாசவிற்கு அருகில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (thepakaran) விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |