கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் ஊழியர்கள் - வெளியான அறிவிப்பு
கனடாவின் (canada) பொதுப் போக்குவரத்துத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி திங்கட்கிழமை நள்ளிரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவில் பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்து பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
அந்தவகையில், ரி.ரீ.சீ போக்குவரத்து சேவையின் தொடர்பாடல், இலத்திரனியல் மற்றும் சமிக்ஞை பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் சுமார் 650 பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
