சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக புதிய சட்டம்: ரிஷி சுனக் அதிரடி
பிரித்தானிய (Britian) பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு (Ruwanda) நாடுகடத்தும் திட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது நேற்றையதினம் (22.04.2024) கூடிய பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இனி எந்த தடையுமில்லை என சுனக் தெரிவித்திருந்தாலும் இந்த சட்டமானது நீதிமன்றத்தால் செல்லுபடியற்றதாக்க கூடிய வாய்ப்பு இன்னும் உள்ளது.
மோசடி கும்பல்
முன்னதாக, இந்த ருவாண்டா திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காரணம் உலகளாவிய குடிவரவில் சமநிலையை பேணுவதற்காக என சுனக் தெரிவித்திருந்தார்.
மேலும், சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை சுரண்டி பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பல்களிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்கும் இந்த திட்டம் உதவும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மனித உரிமை அமைப்புக்கள்
இந்நிலையில், நிறைவேற்றப்பட்ட இந்த ருவாண்டா சட்டமானது 'நீங்கள் பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்தால் தொடர்ந்தும் உங்களால் இங்கு தங்க முடியாது' என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றது.
எவ்வாறாயினும், மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் உலகளாவிய அமைப்புக்கள், இந்த சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என எடுத்துக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |