நாமலுக்கு கிடைத்த மிக அரிய வாய்ப்பு! சர்வதேச அளவில் அங்கீகாரம்
இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக அழிக்கப்பட்ட போதிலும், அதன் பின்னணியிலுள்ள சித்தாந்தம் சர்வதேச ரீதியில் இன்னும் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து நாமல் ராஜபக்சவுக்கு கிடைத்த அழைப்பு அனைவருக்கும் இலகுவில் கிடைப்பது அல்ல. அது மிக அரிய ஒரு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
நாமலுக்கு தனி அங்கீகாரம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.

இத்தகைய உயரிய வாய்ப்பு ஒருவருக்கு மிக அரிதாகவே கிடைக்கக்கூடியது. கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான உரையாடல் எனும் உன்னதக் கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்தப் பல்கலைக்கழகங்கள் இச்சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தன.
எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண்பதற்கான சிறந்த மேடையாகவே இதனை நாம் கருதினோம். இருப்பினும், புலம்பெயர் அமைப்புகளின் கடும் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, நாமல் ராஜபக்ஷவின் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இறுதி நேரத்தில் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களால் இரத்து செய்யப்பட்டது.
இந்தச் செயல்முறையை உன்னிப்பாக அவதானிக்கும் போது மூன்று முக்கிய அரசியல் உண்மைகள் புலப்படுகின்றன. நாமல் ராஜபக்ச கட்டியெழுப்பியுள்ள அரசியல் ஆளுமைக்கும் அடையாளத்திற்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளதை இந்த அழைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், அதன் சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது அரசியல் முகாம் கொண்டுள்ள தேசியவாத கொள்கைகளுக்கு எதிராக எழும் இத்தகைய எதிர்ப்புகளை, எமது அரசியல் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.
இந்த ஒட்டுமொத்த நகர்வுகளும் இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளின் செயற்பாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நடுவீதியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே - மற்றொரு முன்னாள் சிஐடி அதிகாரி கைதாவாரா! நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam