அடையாள அட்டைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த 1.6 மில்லியன் பேர் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக காகிதத்தை வைத்துள்ளனர் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நேற்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வெளியான காரணம்
தேசிய அடையாள அட்டைகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் அட்டைகளின் (Polycarbonate Card) பற்றாக்குறை காரணமாக, தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களம் ஒரு காகிதத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களிடமிருந்து பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டைகளைப் பெற முடியாத அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை
அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட 1.6 மில்லியன் காகிதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஐந்து மில்லியன் பாலிகார்பனேட் அட்டைகளைப் பெறுவதற்கான தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த கொள்முதலை முடித்து நாட்டிற்கு டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை கொண்டுவர நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam