சுரேஷ் சலேவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தனது தடுப்புக் காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்து மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலணையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஊடாக, பயங்கரவாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை எதிர்த்து சுரேஷ் சலே இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த மனு மீதான விசாரணை இன்று(14.07.2026) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri