எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு - போராட்டத்தில் குதித்த சுகாதாரப் பணியாளர்கள்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல மாத சம்பள மிகுதியை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அத்துடன், தங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தைக் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சிலர், தங்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எபோலா போன்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில், முன்நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொங்கோவில் மேற்கொண்டுள்ள இந்த வேலைநிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan