போர் அபாயத்தில் மத்திய கிழக்கு - பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த ஈரான் ஜனாதிபதி
புதிய இணைப்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் ((Ebrahim Raisi) பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான சந்திப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
இரு நாட்டு தலைவர்களும் இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
ஈரானிய ஜனாதிபதி (Iranian President) இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) நாளை பாகிஸ்தானுக்கு (Pakistan) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு (ministry of foreign affairs ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஈரானிய ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை வரை பாகிஸ்தானில் (Pakistan) தங்கியிருப்பார் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது, ரைசி பாகிஸ்தான் (Pakistan) ஜனாதிபதி மற்றும் பிரதமர், செனட் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |