இரண்டு நாள் குழந்தையை விற்க முயன்ற பெண்ணுக்கு கடூழிய சிறை
இரண்டு நாள் குழந்தையை 75,000 ரூபாய்க்கு விற்க முயன்றதாக குற்றம் சாட்டப்ட்ட 46 வயது பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், கடுங்காவல் தண்டனையை விதித்துள்ளது.
நீதிபதி நவரட்ண மாரசிங்க இன்று, குறித்த பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை விதித்தார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20,000 ரூபாய் அபராதத்தையும் அவர் விதித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது
விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, குற்றவாளி தனது கணவருடன் சேர்ந்து ஒரு சட்டவிரோத தடுப்பு மையத்தை நடத்தி வந்தார்.

இந்த மையத்திற்கு வந்த ஒரு பெண், மருத்துவ மேற்பார்வை இல்லாமல், அவரது குழந்தையை பிரசவிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தை பிறப்பைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை பொலிஸ் தலைமையகத்தில் உள்ள ஒரு பெண் அதிகாரிக்கு 75,000 ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.

இதன் போதே, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri