டக்ளஸை சந்திப்பதற்கு சீ.வி.கே மன்றாட்டம் - விடாது துரத்தும் பிரகாஷ்! உடைக்கப்படும் இரகசியங்கள்
டக்ளஸ் தேவானந்தாவிடம் உள்ள ஆசனம் இலங்கை தமிழரசுக் கட்சியை சார்ந்தோருக்கு தேவைப்படுகின்றது.அந்தப் பலப்பரீட்சை தான் இப்போது இடம்பெற்று வருகின்றது.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் சி.வி.கே சிவஞானம் நேற்றுமுன்தினம் (3) தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஷ் தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்து மறுநாளே இலங்கை தமிழரசுக் கட்சி டக்ளஸிடம் உதவி கோரியதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த கோரிக்கையை சுமந்திரனின் நெரு்கிய சகாவான பிரகாஷ் என்பவரே கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam