ஈரானின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இடைக்கால அரசை வழிநடத்தத் தயார்! இளவரசர் ரெசா பஹ்லவி அதிரடி அறிவிப்பு
ஈரானின் தற்போதைய ஆட்சி வீழ்ந்தவுடன், அந்நாட்டை ஒரு ஜனநாயகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் "மாற்றுக் காலத் தலைமைக்கு" தான் தயாராக இருப்பதாக ஈரானின் முன்னாள் மன்னரான ஷாவின் மகன் ரெசா பஹ்லவி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்துவரும் அவர், இதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்
சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள தீவிர எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், கடந்த பெப்ரவரி மாதம் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்தப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தற்போதைய மதவாத ஆட்சி வீழ்ந்த பிறகு, நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட ஒரு இடைக்கால அமைப்பை பஹ்லவி வழிநடத்துவார்.
பஹ்லவி முன்வைத்துள்ள கொள்கைகள்
இந்தப் புதிய அமைப்பிற்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை, அமெரிக்காவைச் சேர்ந்த 'Foundation for Defense of Democracies' அமைப்பின் பொருளாதார ஆலோசகர் சயீத் காசெமிநெஜாத் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஜனவரி மாதம் நடந்த போராட்டங்களின்போது, மீண்டும் மன்னராட்சியை நிலைநாட்டக் கோரி சிலர் முழக்கமிட்டது பஹ்லவியின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், தான் பதவிக்காகப் போட்டியிடவில்லை என்றும், ஒரு பாலமாக மட்டுமே செயல்பட விரும்புவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் ஒருமைப்பாட்டைப் பேணுதல், மதத்தையும் அரசையும் பிரித்தல் மற்றும் மக்களுக்குச் சுதந்திரமான ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்தல் ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்த மாற்றம் ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் மீட்சிக்கு வழிவகுக்கும் என பஹ்லவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan