அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் முற்றாக முடங்கிய ஈரான்: உயிரிழப்பு 429-ஆக உயர்வு! வெளியான புள்ளிவிவரங்கள்
ஈரானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பெப்ரவரி 28 அன்று தொடங்கிய போரிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் சுமார் 43,000 சிவிலியன் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 36,500 குடியிருப்பு அலகுகள் அடங்கும் என்றும், தலைநகர் தெஹ்ரானில் மட்டும் சுமார் 10,000 குடியிருப்பு அலகுகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்தேமா மொஹாஜெரானி குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும், இந்தத் தாக்குதல்களில் 43 அவசர சிகிச்சை பிரிவுகள், 32 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 120 பாடசாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, இதுவரை குறைந்தது 223 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை, உயிரிழந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan