புதிய உச்ச தலைவரைத் தொட்டால் அமெரிக்காவிற்குப் பேரிடி : ஈரான் தூதுவர் கடும் எச்சரிக்கை
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மற்றும் தற்போதைய புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனியை அமெரிக்கா இலக்கு வைத்தால், அதற்கான விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று ரஷ்யாவிற்கான ஈரான் தூதுவர் காசிம் ஜலாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் (Sputnik) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அலி கமேனியின் படுகொலைக்கு ஈரானிய மக்கள் "இரத்தத்திற்கு இரத்தம்" என்ற ரீதியில் பழிவாங்கத் துடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான பதிலடியை ஈரான் வழங்கும்
மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர், சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கக் கோருகின்றனர் என்று கூறிய ஜலாலி, அமெரிக்கா ஏற்கனவே இதற்கான எதிர்விளைவுகளைச் சந்தித்து வருவதாகவும், வருங்காலத்தில் இன்னும் கடுமையான மற்றும் கொடூரமான பதிலடியை ஈரான் வழங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரானின் புதிய தலைமையைப் பாதுகாப்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் போர்ச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri