கைவிலங்கு இல்லாமல் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி! ஏன் இந்தச் சிறப்புச் சலுகை..
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகள் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது கைவிலங்கு இடப்படுவது வழக்கம்.
ஆனால், இஷாரா செவ்வந்தி கைவிலங்கு இன்றி, ஆடம்பரமான தோற்றத்துடன் அழைத்துச் செல்லப்பட்டது சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஷாரா செவ்வந்தி சி.ஐ.டி (CID) காவலில் இருந்தபோது அவருக்கு கேக் வெட்டியது மற்றும் பிஸ்கட் வழங்கியது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
அந்தச் சம்பவங்களின் போது சில அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இவருக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இவருக்குப் பின்னால் இருப்பவர் யார் என்பது போன்ற கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.
இதற்கான முறையான விளக்கத்தை பொலிஸ் தரப்பு வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் #NewsInsightTamil நிகழ்ச்சி..