பதவி விலகும் உறுப்பினர்! நெருக்கடியில் சிக்கிய நெதன்யாகு
இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான எதிர்க்கட்சி தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
இது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
நெதன்யாகுவின் கூட்டணி
இதன்படி, இன்று தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் நெதன்யாகுவின் கூட்டணி அதிகாரத்தை இழக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2023 அக்டோபரில் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, காசாவில் தொடர்ந்து நடக்கும் போரின் காரணமாக பல வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசாங்க கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளில் ஒன்று, ஆண்களுக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கும் கடைசி நிமிட சலுகைகள் தொடர்பில், அரசாங்கத்திலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளது. எனினும், இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்து வரும், நெதன்யாகு, வரவிருக்கும் நெருக்கடி குறித்து அமைதி காத்து வருகிறார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
