படுகொலை செய்தவர்களுக்கு துணைபோகும் கனடா: நெதன்யாகு குற்றச்சாட்டு
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வோஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல்கள்
குறித்த நாடுகளின் தலைவர்கள் ஹமாஸுடன் இணங்கி செயற்படுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Last night in Washington something horrific happened.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) May 22, 2025
A brutal terrorist shot in cold blood a young beautiful couple – Yaron Lischinsky and Sara Milgrim. Yaron had just bought an engagement ring for Sarah. He was planning to give it to her in Jerusalem next week. They were… pic.twitter.com/FFdMwlacJ9
அக்டோபர் 2023 இல் இஸ்ரேல் மீதான தாக்குதல்களைக் குறிப்பிடுகையில், "நீங்கள் மனிதகுலத்தின் தவறான பக்கத்தில் இருக்கிறீர்கள் என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
மேலும் படுகொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், குழந்தை கொலையாளிகள் மற்றும் கடத்தல்காரர்களை மூன்று நாடுகளும் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
