அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அருங்காட்சியம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 இஸ்ரேலிய அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூத எதிர்ப்பு
துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில்,
“வொஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்
இந்த சம்பவம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,
இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
இதுபோன்ற விடயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
