2 பிள்ளைகளை நிர்க்கதியாக்கிய தாயின் விபரீத முடிவு - பொலிஸார் தீவிர விசாரணை
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் - மல்வத்தை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தவறான முடிவெடுத்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(28.09.2026) இடம்பெற்றுள்ளது.
54 வயதுடைய வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம். நசீலின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாமலின் பாதுகாப்புக்கு ஆபத்து! நாடாளுமன்ற வளாகத்தில் எடுக்கப்படும் புகைப்படம் - சிஐடிக்குச் சென்ற முறைப்பாடு