நாமலின் பாதுகாப்புக்கு ஆபத்து! நாடாளுமன்ற வளாகத்தில் எடுக்கப்படும் புகைப்படம் - சிஐடிக்குச் சென்ற முறைப்பாடு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர் நடந்து கொள்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சிலர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
அச்சுறுத்தல்
முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர் ஒருவர்,
“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினராக சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சிறப்புரிமை அவருக்கு உண்டு.

அதன் அடிப்படையில், சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் நாமல் ராஜபக்சவை சிறைச்சாலை பேருந்தில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருகின்றனர். இது அவர்களுடைய பொறுப்பாகும்.
இவ்வாறு நாமல் ராஜபக்சவை அழைத்து வரும் சிறைச்சாலை பேருந்து, நாடாளுமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, அதனை ஒருவர் புகைப்படம் எடுத்து, பேருந்தின் இலக்கத் தகடு தெளிவாகத் தெரியும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் சாதாரண நபரோ, ஜேபிவிபியிடம் பணம் பெற்றுக் கொண்டவரோ அல்லது போலி சமூக ஊடகக் கணக்கை வைத்திருப்பவரோ அல்ல.

நாங்கள் அவதானித்த வரையில், எமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த நபர் ஜனாதிபதி ஊடப் பணிப்பாளர்களுள் ஒருவராக பணியாற்றுகின்றார்.
வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தால், இது தெளிவாகவே நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான ஒரு பிரசாரமாக தெரிகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
you may like this video