நாமலை தடுத்து வைக்க காரணமே இல்லை! விரைவில் பிணை - நம்பிக்கையோடு சகாக்கள்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் வெளியே எடுக்க முடியும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(27.09.2026) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் வெளியில் எடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
விரைவில் பிணை
சட்டத்தரணிகளுடன் தொடர்ந்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவை கைது செய்தது தவறானது என நீங்கள் கருதுகின்றீர்களா என்று இதன்போது ஷாந்த பண்டாரவிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “இல்லை, கைது செய்யப்பட்டமை தவறு என்று கருதவில்லை. அவர் கைது செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக ஒரு சிக்கல் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவை பிணையில் வெளியில் கொண்டுவர முடியும் எனவும், அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருப்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்பதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்கும் என சட்டத்தரணிகள் தெரிவிப்பதாகவும் ஷாந்த பண்டார ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார்.