பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தீவிரமடையும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
தென்மேற்கு பிரான்ஸின் 'காப் ஃபெரெட்' தீபகற்ப பகுதியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி வருவதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 10,000 ஹெக்டேயர் பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதிகள் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயின் அச்சுறுத்தலால் சுமார் 40,000 மக்கள் படகுகள் மற்றும் சாலைகள் வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ
இதேபோல் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகிலும் காட்டுத்தீ பரவி வருவதால், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவசரநிலையை அறிவித்துள்ளார்.

மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசும் காற்றும், 37 பாகை செல்சியஸ் வெப்பமும் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாகக் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியம் விசேட தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகிறது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam