ஏமன் கடலில் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: சோமாலியக் கொள்ளையர்களின் பிடியில் எம்.டி ஆசானா
ஏமன் நாட்டின் ஏடன் வளைகுடாவில் பயணித்த 'எம்.டி ஆசானா' (MT Asana) என்ற எரிபொருள் மற்றும் இரசாயனப் பொருள் ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
தன்சானியக் கொடியுடன் பயணித்த இந்த கப்பல், தற்போது சோமாலியக் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் ஜெர்மனியைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 10 பேர் உட்பட மொத்தம் 20 பணியாளர்கள் உள்ளனர்.
அச்சுறுத்தல்
கப்பலில் உள்ள கொள்ளையர்களுக்குச் சிறிய படகுகள் மூலம் உணவுகள் கொண்டு செல்லப்படுவதை உள்ளூர்வாசிகள் நேரில் கண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக 'கடல்சார் கடத்தல்' என ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைப் பிரிவு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2008 முதல் 2018 வரை தீவிரமாக இருந்த சோமாலியக் கொள்ளையர்களின் அச்சுறுத்தல், 2023க்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri