கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்..! அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்

Jaffna Anura Kumara Dissanayaka Kachchatheevu
By Rakesh Sep 04, 2025 09:44 PM GMT
Report

தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே, கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம்(4) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எல்ல - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட கோர விபத்து.. பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

எல்ல - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட கோர விபத்து.. பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

யாழ் விஜயம்

மேலும் குறிப்பிடுகையில்,

"அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்..! அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம் | Why Did The President Go To Katchatheevu

யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல.

தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர்.

தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா - கசிந்தது இரகசியம்...

தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா - கசிந்தது இரகசியம்...

கச்சதீவு விஜயம்

எனவே, கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

கச்சதீவுக்கு ஜனாதிபதி ஏன் சென்றார்..! அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம் | Why Did The President Go To Katchatheevu

அந்தவகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஜனாதிபதி என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும். அவ்வாறு செல்லும் போது மக்களுடன் கலந்துரையாடி, அந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும்.

நாம் அறிந்த வகையில் இதுவரையில் ஜனாதிபதி ஒருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த விஜயம் மிக முக்கியத்துவம் மிக்கது"  என குறிப்பிட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மேயுடன் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு! வெளியான தகவல்

கெஹெல்பத்தர பத்மேயுடன் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு! வெளியான தகவல்


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US