நல்லாட்சிகால நீதிமன்றத் தீர்ப்பை தட்டிக்கழிக்கும் அநுர.. குற்றம்சாட்டும் பௌத்த தேரர்
மட்டக்களப்பு, மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதி தொடர்பில் தென்னே ஞானானந்த தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்று (02) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மேய்ச்சல் நிலப்பகுதியைச் சேர்ந்த காணியை அவர்களின் கால்நடை மேய்ச்சல் நடவடிக்கைகளுக்காக உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் நடவடிக்கை
சுமார் 200 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் குறித்த மேய்ச்சல் நிலத்தை கால்நடைகளுக்காக விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தும், இதுவரையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்டோர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு மக்களைப் பரிகாசத்துக்கு உட்படுத்தி இந்தப் பிரச்சினையைத் தட்டிக்கழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri