டித்வா வீட்டுத்திட்ட நிதி - கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு குவிந்த போராட்டக்காரர்கள்
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 50இலட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட நிலையில் தமக்கான பணத்தை வழங்க வலியுறுத்தி டித்வா வீட்டுத்திட்ட பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனர்யீர்ப்பு போராட்டமாாானது கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பு இடம்பெற்றுள்ளது.
வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப தொகைகள் பயனாளிகளுக்கு வைப்பில் இடப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய பணம் வழங்கல் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மிகுதி கொடுப்பனவை விடுவிக்க
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது பருவமழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக சிலர் தமது வாழ்ந்த தற்காலிக வீட்டினையும் உடைத்து நிரந்தர வீடும் இன்றி தற்பொழுது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் தமக்கான மிகுதி கொடுப்பனவை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவை மிக விரைவாக எதிர்வரும் வாரத்தில் வீட்டுத்திட்ட உரிமையாளர்களுக்கு மீள வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.


நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam