முழுநேர விவசாயியாக மாறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி! பொலன்னறுவையில் மாந்தோட்டம்..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
மேலும், தற்போது தான் அதிகமாக புத்தகம் வாசிப்பதில் தனது நேரத்தைச் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் மாந்தோட்டம்..
அத்துடன், முக்கியமான மத நிகழ்வுகள், திருமண அழைப்புக்கள், முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அழைப்புக்களை ஏற்றுக்கொண்டு அவற்றில் கலந்து கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலை தவிர்த்து விவசாயத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து வரும் நிலையில், தான் உண்மையிலேயே தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று பொலன்னறுவையில் இருப்பதாகவும், வயல் நிலமும் இருப்பதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, தான் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan