நீதிமன்ற தீர்ப்புக்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அநுர! வலுக்கும் எதிர்ப்புக்கள்..
நீதிமன்றத் தீர்ப்புக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னரே அறிந்து கொள்கின்றார் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம்(01.11.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில், சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்பவா அல்லது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விருப்பத்திற்கு ஏற்பவா என்ற கேள்வி எழுகின்றது.
மிகவும் பாரதூரமான விடயம்
ஏனெனில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுக் கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றும் போது, குறிப்பிட்ட சில நாட்களில் குறிப்பிட்ட சில வழக்குகளுக்கான தீர்ப்புக்கள் வெளியாகவுள்ளதாகக் கூறுகின்றார்.
அத்துடன், அந்தத் தீர்ப்புக்கள் வெளியாகும்போது கைத்தட்டி மகிழவும், பட்டாசு கொளுத்திக் கொண்டாடவும் தயாராக இருக்குமாறு மக்களிடம் ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

அப்படியானால், நீதிமன்றங்கள் வழங்கவுள்ள தீர்ப்புக்கள் குறித்து நாட்டின் அரச தலைவர் முன்கூட்டியே எவ்வாறு அறிந்து கொள்கின்றார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு இரண்டு சாத்தியக்கூறுகளே உள்ளன. ஒன்று, குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக இவ்வாறான தீர்ப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதி நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.
அல்லது, நீதிபதிகளே தாம் வழங்கவுள்ள தீர்ப்புக்கள் குறித்து ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.
இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இருப்பினும், இந்த நாட்டில் அவ்வாறு செயற்படும் நீதிபதிகள் இல்லை என்ற நம்பிக்கை இன்றும் எமக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri