பௌத்த மதத்திற்கே அவமானம்..! அரசியல்வாதிகளின் கைக்கூலியாகச் செயற்படும் தேரர்கள்
அடாவடித்தனம் செய்யும் தேரர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் மகாநாயக்க தேரர்களுக்கு அல்ல, இலங்கையின் பொலிஸாருக்கே இருக்கின்றது என பலாங்கொடை விகாரையின் விகாராதிபதியாக இருந்த பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடுமையாக்கப்படும் நாட்டின் சட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த மத போதனைகளுக்கு எதிராகவே ஞானசார தேரர் மற்றும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் போன்றவர்கள் செயற்படுகின்றனர்.
அரசியல்வாதிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பௌத்த மதத்தினருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இதுபோன்ற தேரர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகத் தோன்றிய பௌத்த மதத்தில் இருந்துகொண்டு, சில தேரர்கள் சூனியம் வைப்பதைச் சமூக வலைத்தளங்களில் நாம் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் தர்மத்திற்கு எதிரானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
நாட்டின் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், அப்போதுதான் நாட்டில் நடைபெறும் இதுபோன்ற நாடகங்கள் குறையும். ஜனாதிபதியும் நியாயமான முறையில் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியும் என்றார்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan