எல்ல - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட கோர விபத்து.. பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
புதிய இணைப்பு
எல்ல - வெல்லவாய வீதியில் அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.
இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, போதிய வெளிச்சம் இன்மையால் மீட்பு பணிகள் தாமதமடைந்ததாகவும் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
20ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் இராணுவத்தினரால் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் இணைப்பு
எல்ல - வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
24ஆவது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கோர விபத்து
தங்காலையில் இருந்து எல்லவிற்கு சுற்றுலா சென்ற தங்காலை நகரசபை ஊழியர்களை குழுவொன்று தங்காலைக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 20 மணி நேரம் முன்

பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்: ஒரு வைரல் செய்தி News Lankasri

மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
