மேற்கு வங்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய பிரதமருக்கு சஜித் வாழ்த்து..!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சஜித்,
மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனது வாழ்த்துகள். இந்த மக்கள் ஆணை மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகப் பங்கேற்பின் நீடித்த வலிமையையும் பிரதிபலிக்கின்றது.

இந்தியா தொடர்ந்தும் முன்னேற்றமடையவும் ஸ்திரத்தன்மையுடன் இருக்கவும் வாழ்த்துகின்றேன் என குறிப்பிடடுள்ளார்.
நீண்டகாலமாகப் பிராந்தியக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த மேற்கு வங்க மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவின் இந்த வாழ்த்துச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan