பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்ததாக வெளியான தகவல் தவறு எனவும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக முன்னிலையில் உள்ளது.
விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்பு
அதன்படி, விஜய் முதல் அமைச்சராக பொறுப்பேற்று, முதல்வர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் 118 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சிக்கலான நிலையில் உள்ளது.

இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
5 ஆண்டுகள் வலுவான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை அவர் நேரில் சந்தித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது.
தவெக நிர்வாகிகள் விளக்கம்
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்ததாக வெளியான தகவல் தவறு எனவும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான காரில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றவர்கள் தவெக நிர்வாகிகள் இல்லை” என்றும் கூறியுள்ளனர்.
த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan