தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்! நகை வாங்க காத்திருப்போருக்கு சோகமான செய்தி
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (06) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று நேற்று 388,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 7000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (06.05.2026) அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4625.24 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 74.93 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காரணமாக, இலங்கையிலும் தங்க விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam