ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஜாஸ்க் தீவுப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவலர் படையின் எச்சரிக்கையைப் புறக்கணித்துச் சென்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை வழிநடத்துவதற்காக "சுதந்திரத் திட்டம்" என்ற திட்டத்தை இன்று(4.5.2026) தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த முயற்சிக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, 15,000 இராணுவ வீரர்கள், 100க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு