சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது
பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதிமன்றில் முற்படுத்த பூநகரி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஒப்பந்தகாரருக்கு வழங்குவதற்கு
ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்ற வகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி சாரதியினையும் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்ததாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது பூநகரி நெற்புலவு முன்பள்ளி வீதி புனரமைப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
அவர்களுக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ஜெயபுரத்தில் அமைந்துள்ள மணல் யாட்டிலிருந்து சனிக்கிழமை அன்று ஒப்பந்தகாரருக்கு வழங்குவதற்கு கொண்டு சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதி சிட்டை வழங்கப்பட்ட உழவு இயந்திரம் கழிவகற்றும் பணிக்குச் சென்றமையால் சாரதி சபையின் மற்றொரு உழவு இயந்திரத்தினை கொண்டு சென்று வீதி வேலையில் ஈடுப்பட்டுள்ள ஒப்பந்தகாரருக்கு மணலை ஏற்றி வந்த போது விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு