சீரற்ற காலநிலை 10ம் திகதி வரையில் நீடிக்கும் சாத்தியம்
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 10ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் அதுல கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மழையுடனான காலநிலை
எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையும் என தெரிவித்துள்ளார்.
எனினும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தெற்கு மற்றும் மேல் கடல் பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| மலையகத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! |

இதன்படி, மேல், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என தெற்கு ஊடகமொன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை
சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளார்.
| நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு |

மத்திய மலைநாடு, வடமத்திய, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan