பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!
பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீ
டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.