ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்த இந்தியா
Lowy Institute வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான Asia Power Index அறிக்கையின்படி, ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகள், இராஜதந்திர செல்வாக்கு, பாதுகாப்பு உறவுகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம் ஆகியவை இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், ஆசியாவின் இரண்டாவது திறமையான பிராந்தியத் தலைவராக பிரதமர் மோடி மதிப்பிடப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகார இடைவெளி, 2018ஆம் ஆண்டு Asia Power Index அறிமுகமானதிலிருந்து மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.

இருப்பினும், சீனாவின் மொத்த அதிகார வலிமை இந்தியாவை விட 80 சதவீதம் அதிகமாக இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை மற்றும் கலாசாரச் செல்வாக்கு ஆகியவையும் ஆசியாவில் அதன் நிலையை உயர்த்தியுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மொத்த அதிகார மதிப்பீட்டு இடைவெளியும் குறைந்து வருகிறது. இதன்படி, அமெரிக்கா – 78.9 புள்ளிகள், சீனா – 73.6 புள்ளிகள் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமை, பாதுகாப்பு வலையமைப்பு, இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனா பல துறைகளில் தனது வலிமையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
2026ஆம் ஆண்டுக்கான Asia Power Index ஆசியாவின் 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களை 131 குறிகாட்டிகள் மற்றும் எட்டு முக்கிய அதிகார அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.