அநுர அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்
நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (23.11.2026) தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சம்பள அளவுத்திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23.11.2026) மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் வைத்தியசாலை முன்பாக அமைதியான முறையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், ட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை (23) மதிய நேர இடைவேளையின் போது பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தம்பலகாமம்
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் ,அலுவலக உதவியாளர்கள்,சாரதிகள் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகத்தர்கள் இன்று (23) பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (23) நண்பகல் 12 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் தள வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று (23) அடையாள பணிப்பகிஷ்கரிப்பிலும் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை தாதியர்கள் அபிவிருத்தி தொழிற்சங்க இன்றைய தினம்(23.11.2026) தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நுவரெலியா
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவாக அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று (23) மதிய உணவு வேளையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து (23) இன்று திங்கட்கிழமை நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக தேசிய எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டன.


வவுனியா
வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை இன்று (24.11) முன்னெடுத்தனர்.




