லஞ்சம் பெற்ற முன்னாள் மதிப்பீட்டாளருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை, குடியுரிமை பறிப்பு

High Court of Sri Lanka
By Kamal Nov 23, 2026 03:06 AM GMT
Report

வர்த்தகர் ஓருவரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரித் தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபா லஞ்சம் கோரி, அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்துள்ளதுடன், பிரதிவாதியின் குடியுரிமையை 7 ஆண்டு காலத்திற்குப் பறிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் பெற்ற முன்னாள் மதிப்பீட்டாளருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை, குடியுரிமை பறிப்பு | Court 16 Year Sentence Inland Revenue Bribe Case

இது தொடர்பாகத் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கை மூலம் அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய பிரதிவாதிக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் வருடாந்தம் அறவிடப்பட வேண்டிய வரித் தொகையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக 4 இலட்சம் ரூபா லஞ்சம் கோரி, அதில் 3,75,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இலஞ்ச வழக்கு தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறைப்பாட்டுத் தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக மேல் நீதிமன்றம் தீர்மானித்தது.

பிரதிவாதிக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் தலா நான்கு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவரது முதிர்ந்த வயது மற்றும் நிலவும் நோய்வாய்ப்பட்ட நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அந்தச் சிறைத்தண்டனைகளை நான்கு ஆண்டு காலத்திற்குள் அனுபவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், 3,75,000 ரூபா மற்றும் 20,000 ரூபா அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 14 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்குத் தண்டனை விதிப்பதற்கு முன்னர் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கருத்துத் தெரிவிக்கையில், தமது கட்சிக்காரர் சுமார் 40 ஆண்டு காலம் அரச சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது வயது முதிர்வின் காரணமாகப் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய அவருக்குக் குறைந்த தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், முறைப்பாட்டுத் தரப்பு சார்பில் கருத்துத் தெரிவித்த இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருவாயை அறவிடும் பிரதான நிறுவனமொன்றின் அதிகாரியாகச் செயற்பட்டுப் பிரதிவாதி இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.

அரச சேவையில் இலஞ்சம் பெறுவது சமூகத்திற்குப் பாரிய தீங்கை விளைவிக்கும் செயலாகும் எனவும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் ஏனைய அரச ஊழியர்களுக்கும் தடுப்புச் செய்தியொன்றை வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட பணத்தையும் இலஞ்சச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தண்டனையாக அறவிட உத்தரவிடுமாறும் முறைப்பாட்டுத் தரப்பு கோரியிருந்தது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதிபதி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற பொதுமக்கள் வரி வருவாயை அறவிடும் பிரதான நிறுவனமொன்றின் அதிகாரி செய்யும் இத்தகைய குற்றம் தொடர்பில் இலகுவாகச் செயற்பட முடியாது என வலியுறுத்திப் பிரதிவாதிக்கு உரிய தண்டனைகளை விதித்தார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US